வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (07:50 IST)

ரயில்வே ஸ்டேஷனில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் - இன்று முதல் அமல்

ரயில்வே ஸ்டேஷனில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
 
குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனிலும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் பலர் செல்பி எடுக்கின்றனர். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
 
இதனைத் தடுக்க  ரயில் நிலையங்கள், பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றிலிருந்து செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்திருந்தது. 
 
அதன்படி இன்று முதல் ரயில் நிலையங்களுக்குள் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.