குஜராத்தில் ரூ.76 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது


Abimukathesh| Last Updated: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (19:02 IST)
குஜராத் மாநிலம் சூரத் நகரில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூ.76 லட்சம் சிக்கயது. இதில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர். 

 

 
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.76 லட்சம் சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
 
இதில் ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் ஒரு ஆடை வடிவமைப்பாளர். மேலும் அவர்களிடம் சிக்கிய ரூ.76 லட்சம் தொகை, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :