1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (19:25 IST)

திடீரென 2 கிமீ உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி

திடீரென 2 கிமீ உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி
ஆந்திர மாநிலத்தில் திடீரென இரண்டு கிலோமீட்டர் கடல் உள்வாங்கி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகம் உள்பட உலகின் பல பகுதிகளில் கடல் பகுதி திடீரென உள்வாங்கும் நிகழ்வுகள் நடந்துள்ளது. தமிழகத்தில் சுனாமி வந்தபோது திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்தர்வேதி என்ற பகுதியில் உள்ள கடலில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் 
 
இது குறித்து புவியியல் மற்றும் கடல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது