வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:38 IST)

காஷ்மீர் பனிமலையில் மாயமான இராணுவ வீரரின் உடல் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் சிகரம் இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் இருக்கும் மிக உயரமான இடமாகும். இங்கு கடந்த 1996 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியைச் சேர்ந்த ஹவில்தார் கயா பிரசாத் என்ற இராணுவ வீரர் பணயில் இருந்தபோது திடீரென காணாமல் போனார்.
அவரது உடல் 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளது. ‘‘அவரது உடல் சண்டிகார் கொண்டுவரப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும். அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் உடனே தெரியவில்லை.
 
பனிச்சரிவு காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அவர் மாயமானபோது 15 ராஜ்புட் யூனிட்டில் பணியில் இருந்தார்’’ என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
உலகிலேயே மிக உயரமான போர்க்களம் சியாச்சின் ஆகும். இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரிக்குச் செல்லும். 1984 ஆம் ஆண்டில் இருந்து அங்கு இந்தியா-பாகிஸ்தான் தரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.