வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (08:57 IST)

ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 178 பேர் உடல்நலம் பாதிப்பு.. பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி, உணவு ஒவ்வாமையால் 178 பாதிக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டம்  மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது. இதுகுறித்து, ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஹோட்டலில் பரிமாறப்பட்ட மயோனைஸே, இதற்கு காரணம் என கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது
 
இதனிடையே இந்த ஹோட்டலில் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து இந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசாரின் விசாரணைக்கு பின்னர் கைது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஒரே ஓட்டலில் சாப்பிட்டால் 178 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு அதில் ஒரு பெண் உயிர் இழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva