வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (09:35 IST)

சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு புதிய சிறார் நீதி சட்டத்தின் கீழ் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு புதிய சிறார் நீதி சட்டத்தின் கீழ் சிறை

கால்நடைகளை ஓட்டிச் சென்ற 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு புதிய சிறார் நீதி சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

 
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இவ்வழக்கில் 18 வயது நிரம்பாத குற்றவாளி ஒருவர் தண்டிக்கப்பட்டு மூன்றாண்டுகள் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
 
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து புதிய சிறார் நீதிச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோர் 16 முதல் 18 வயதில் இருந்தால், விசாரணைக்கு பின் அவரை 18 வயதுக்கு மேற்பட்டவராக கருதி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
 
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மெயின்புரி அருகே உள்ள அயிலாவ் என்ற கிராமத்தில் கால்நடைகளை ஓட்டிச் சென்ற 9 வயது குழந்தையை கடந்த வியாழக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுவனை காவல் துறையினர் வெள்ளியன்று கைது செய்தனர்.
 
அவர் மீது புதிய சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பதற்கு பதிலாக மாவட்ட சிறையில் காவல் துறையினர் அடைத்துள்ளனர்.