திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (19:19 IST)

இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த சில மாதங்களாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில் தற்போது 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் 90 சதவீத பெரியவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் ஒன்றரை கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.