மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!

மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!


Caston| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:22 IST)
ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் அவரது மாமன் மகன்கள் இருவரால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

 
 
ஹரியானாவின் மஹிப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை அவரது மாமன் மகன்களான 18 வயதான சுரஜ் மற்றும் அஜீட் ஆகிய இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது அந்த சிறுமிக்கோ, அவரது பெற்றோருக்கோ இதுவரை தெரியாமல் இருந்துள்ளது. தற்போது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதை அடுத்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவரை பரிசோதித்தபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :