செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (17:20 IST)

பிரபல வங்கியில் இருந்து 15 ஆயிரம் பேர் ராஜினாமா ? என்ன காரணம் ?

நாட்டில் பிரபலமான தனியார் வங்கியான ஆக்ஸிஸ்-ல் (Axis  Bank) இருந்து சமீபகாலமாக சுமார் 15000 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டில் பல தனியார் வங்கிகள் இயங்கி வருகின்றன. அதில்  ஆகிஸிஸ் (Axis  Bank) வங்கியும் ஒன்று. இந்நிலையில், இந்த வங்கியில் நிர்வாகச் சீர்திருத்தம் காரணமாக அதன் ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும்,  அதிகளவில் இலக்குகள் நிர்ணயித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றிய ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
மேலும், இவ்வங்கி புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.