ஒரே நாளில் 140 ரயில்கள் ரத்து; முன்பதிவு சர்வர் கோளாறு! – பயணிகள் அவதி!
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த சில காலமாக இந்தியாவின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்களில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே இறங்கியது. நேற்று இந்த பணிகள் தொடங்கப்பட்டு முழுமூச்சாக நடைபெற்றன.
பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று நாடு முழுவதும் 103 ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. 35 ரயில்கள் பகுதிநேர அளவில் ரத்து செய்யப்பட்டன. ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ், சோலாப்பூர் எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை – சென்னை விரைவு ரயில் உள்ளிட்ட பல சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி தளத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவை ரத்து செய்வது உள்ளிட்டவற்றை செய்ய முடியாமல் போனதாக பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.