ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (13:24 IST)

தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை ஒற்றை ஆளாக தூக்கிய 14 வயது சிறுமி.. வீடியோ வைரல்..!

நாங்கள் ஒரு அருகே தாய் மீது தவழ்ந்த ஆட்டோவை 14 வயது சிறுமி ஒற்றை ஆளாக தூக்கி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
கர்நாடக மங்கலம் மாநிலம் மங்களூர் அருகே சாலையை தாய் கடக்க முயன்ற போது திடீரென அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதியது..
 
அந்த ஆட்டோ தாயின் மேல் விழுந்த நிலையில் அதை பார்த்த அவரது 14 வயது மகள் தனது முழு பலத்தை பயன்படுத்தி ஆட்டோவை தூக்கி தாயை காப்பாற்றினார். தனது தாய் ஆபத்திலிருந்ததை உணர்ந்து, உடனே அந்த 14 வயது சிறுமி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை எதிர்பார்க்காமல் தானே தூக்கி காப்பாற்றிய வீடியோ சமூக வளாகங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
அந்த ஆட்டோவில் வேறு சிலர் இருந்த நிலையில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகவும் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் என்று மோதிய நிலையில் அந்த இருசக்கர வாகனத்தில் இருந்தவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran