1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (07:48 IST)

திமுக, காங்கிரஸ் உள்பட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

திமுக காங்கிரஸ் உள்பட 13 எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக ஒன்று கூட வேண்டும் என முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் தற்போது திமுக காங்கிரஸ் உள்பட 13 எதிர் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்தியாவில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சிகள் இந்த கூட்டாக அறிக்கை வெளியிட்டதன் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு க ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 எதிர்கட்சி தலைவர்களின் கூட்டறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது