1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (15:41 IST)

உபியில் சாராயம் குடித்த 13 பேர் பலி: 5 பேர் கைது

உபியில் விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான சம்பவத்தில் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
 
உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள துல்கான் கிராமத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மதுபான கடையில் பலர் சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு நேற்று வரை 9 பேர் உயிரிழந்தனர்
 
இதனையடுத்து, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தை அடுத்து சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான அந்த மதுபான கடை உரிமையாளர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் உத்தரபிரேதச அரசு, பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.