வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (12:36 IST)

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

Bhola Baba
உத்தர பிரதேசத்தில் நடந்த மதக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியான நிலையில் அந்த கூட்டத்தை நடத்திய சாமியார் தலைமறைவாகியுள்ளார்.



உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலா பாபா என்ற சாமியாரின் ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், சாமியாரை தரிசனம் செய்ய வேண்டு மக்கள் முண்டியடித்து சென்றதில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 116 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யாததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த அசம்பாவிதம் எதேச்சையாக நிகழ்ந்ததா? அல்லது திட்டமிடப்பட்ட சதியா? என்பது பற்றி விசாரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.


இவ்வளவிற்கும் இடையே இந்த நிகழ்ச்சியை நடத்திய சாமியார் போலா பாபா தப்பி தலைமறைவாகியுள்ளார். இந்த போலா பாபா முன்னதாக உத்தர பிரதேச காவல்துறையில் காவலராக பணியாற்றிவர். 1990க்கு பிறகுதான் விடுப்பு ஓய்வு பெற்று சாமியாராக மாறி வலம் வந்துள்ளார். தற்போது சாமியாரை தேடும் பணிகளை முடுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டவர்களும் தலைமறைவாகியுள்ளதால் கைது நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K