1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 18 பிப்ரவரி 2023 (13:52 IST)

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் இந்தியா வருகை!

தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து 12 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.

கடந்தாண்டு ஆப்பிரிக்க நாடான நமீபியாவுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிவிங்கி புலிகளை நம் நாட்டிற்கு வழங்கியது.

தற்போது, இந்தச் சிவிங்கிகள் மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து, விமானம் மூலம் 5 பெண் மற்றும் 7 ஆண் என மொத்தம் 12 சிறுத்தைகள் ம.பியின், குவாலியருக்கு கொண்டுவரப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில் மத்திய பிரதேசம், பாஜக முதல்வர் சிவரஜ் சிங் சவுகான் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.