1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (20:07 IST)

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறு தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என சிபிஎஸ்இ ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது மறுதேர்வுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளிவந்துள்ளது
 
இதன்படி பத்தாம் வகுப்புக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை மறு தேர்வு நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் 1278 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் ஒரு தேர்வறையில் 12 மாணவர்களுக்கு பதிலாக 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் சானிடைசர் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
மேலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது ஒவ்வொரு மாணவரது கடமை என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது