வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (12:43 IST)

பள்ளி விடுதியில் சாப்பிட்ட 100 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

jharkhand
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமண்ந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பகுர் மாவட்டம் ஜகாரியாவில் தனியார் உண்டு  உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் இரவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு  வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர், உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேற்குவங்கம் மாநிலம் பிர்பூர்ம் மாவட்டத்தில்  உள்ள ராம்பூர்காட்டில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டடு செல்லப்பட்டனர்.

அங்கு, 45 பேர் சுகாதார மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளளனர்.

இரவு உணவை சாப்பிட்ட மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது பற்றி விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.