ஆண்டுக்கு 100 ராக்கெட்டுகள் ஏவப்படும்: இஸ்ரோ
அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 100 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 100 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராட்ச்சி மையத்தின் திட்ட இயக்குனர் கே.சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பத்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் விண்வெளி ஓடம் "ஆர்எல்விடிடி', வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் இந்தியாவின் பெருமை உலகளவில் உயர்ந்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான சாத்தியங்களை கண்டறிந்துள்ளோம்.
பொதுவாக, விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறிவிடும். ஆனால் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி ஓடம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு, மீண்டும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பி வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதை சுமார் 10 முறை விண்ணில் ஏவ முடியும். இதனைத் தயாரிப்பதற்கு ரூ.95 கோடி வரை செலவானது.
எனினும், எதிர்காலத்தில் ராக்கெட் தயாரிப்பதற்குப் பதிலாக, இந்த விண்வெளி ஓடத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது 10 மடங்கு செலவு குறையும். மேலும், விண்வெளிக்கு வீரர்களையும் அனுப்பலாம்.
ராக்கெட்டைப் போல செங்குத்தாக விண்ணை நோக்கி சீறிப்பாயும் இந்த விண்வெளி ஓடம், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாகும், என்றார்