செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (08:13 IST)

நீட் தேர்வில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம், 10 ஆண்டு ஜெயில்: புதிய சட்டம் அமல்..!

jail
நீட் தேர்வு உட்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட்  போன்ற நுழைவு தேர்வுகளில்  முறைகேடுகள் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தனிநபர் அல்லது குழுவுடன் சேர்ந்து தேர்வு நடத்தும் அதிகாரிகள், நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை செய்தால் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.

மேலும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு பிறகு நீட் தேர்வில் முறைகேடு குறையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran