வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (19:53 IST)

ஆன்லைனில் மின்சாரக்கட்டணம் செலுத்தினால் 1% மின்சாரக் கட்டணம் தள்ளுபடி?

பொதுமக்கள் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ஆன்லைனில் மின்சாரக்கட்டணம் செலுத்தினால் 1% மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் காலம் காலமாய் தங்கள் வீட்டின், அலுவலகத்தின் மின்சாரக் கட்டணத்தை மின்சார அலுவலகத்திற்கு போய் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கட்டணத்தை செலுத்தி வந்தனர். ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனை முன்னேற்றத்தின் காரணமாக நாட்டில் தற்பொழுது 20% மக்கள் தங்களது மின்சாரக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்துகின்றனர்.
இதன்மூலம் பொதுமக்களின் அலைச்சலும் மிச்சப்ப்படுகிறது, மின்சார ஊழியர்களின் வேலையும் மிச்சப்படுகிறது, அதேபோல் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டாளர்களும் அதிகரிக்கிறார்கள். ஆகவே இதனை ஊக்குவிக்கும் வகையில் இனி ஆன்லைனில் மின்சாரக்கட்டணம் செலுத்துவோருக்கு மின்கட்டணத்தில் இருந்து 1% தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம் விரைவில் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.