தென்னிந்தியர்களை அவமதித்தவரை ஜெயிலில் அடையுங்கள்: சுப்பிரமணியன் சுவாமி
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கார்கள் போல் உள்ளனர் என்று கூறியவரை சிறையில் அடையுங்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காங்கிரஸ் கட்சியின் அயலக தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா என்பவர் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது
குறிப்பாக அவர் வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போல் இருக்கிறார்கள் என்றும் தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பிரதமர் மோடியும் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்
இந்த நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறிய போது தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் இந்தியாவில் இருந்தால் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அதன் பிறகு அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனாவுக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva