வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மே 2023 (23:26 IST)

டெல்லியில் 16வயது சிறுமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் கைது

டெல்லியில் 16வயது  சிறுமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஷாஹில் என்பவரை பிடிக்க 6 தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை  கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை காதல் விவகாரம் காரணமாக கொன்றதாக  கூறப்படுகிறது. சிறுமியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை தேசிய மகளிர் ஆணையம், டெலினா கோங்டுப் தலைமையில்  3 பேர் குழுவை  அமைத்து, தேடி வந்த நிலையில் ஷாஹிலை  தற்போது கைது செய்துள்ளனர்.

சிறுமியை 20க்கும் மேற்பட்ட முறை சிறுமியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாகவும், இதுகுறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.