Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீட் தேர்வு எழுத ஆதார் முக்கியம் - மாணவர்கள் அதிர்ச்சி

Last Modified வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (12:49 IST)
நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை கட்டயமாக  இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
வருகிற மே 6ம் தேதி நடைபெறவுள்ள நீட்தேர்வுக்காக, விண்ணப்பங்கள் நேற்று இணையதளத்தில் வெளியாகின. அதில் மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப படிவத்தில் தங்களின் பெயர், முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை கட்டயமாக பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி ஆதார் ஆட்டை இல்லாத பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் ஆதார் சேர்க்கை மையத்திற்கு சென்று ஆதார் பெற்ற பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதேபோல், மாணவர்களின் விண்ணப்ப விவரங்களிலிருந்து, ஆதார் விவரங்கள் வேறுபட்டால் அவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது எனவும் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே ஓட்டுநர் உரிமம், தொலைப்பேசி இணைப்பு, வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளோடு ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு அறிவித்துவிட்ட நிலையில், நீட் தேர்வுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவித்தது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :