செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (10:50 IST)

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - பொதுமக்கள் கடும் பீதி

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.


ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கமானது ரிக்டரில் 4.6 ஆக பதிவாகியது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து இன்னும் செய்தி வெளியாகவில்லை. இதேபோல் அசாமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.