1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:18 IST)

அறம் - திரைவிமர்சனம்

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் எழுத்து மற்றும் இயக்கத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைப்பில் ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் அறம்.


 
 
அறம் படம் மக்களின் முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே அறம்.
 
ராமச்சந்திரன் துரைராஜ் விவசாய கூலி. தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் காட்டூர் கிராமத்துவாசி. இவரது மமைவி சுனுலக்‌ஷ்மி. இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் மகாலட்சுமி என இரு குழந்தைகள்.
 
பொருளாதார பிரச்சினை வாட்டி எடுக்கும் சூழலிலும் பாசமும், அன்பும் இவர்கள் வாழ்க்கையை அழகாக நகர்த்தி செல்கிறது. இந்நிலையில், இவரது மனைவி தனது மகளுடம் முள் வெட்டுவதற்கு செல்கிறாள்.
 
அங்கு எதிர்பாராத விதமாக இவர்களது மகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். குழந்தையை காப்பாற்ற மாவட்ட ஆட்சியரான நயன்தாரா நேரடியாக களத்தில் இறங்குகிறார். 
 
ஆட்சியராக நயன்தாரா என்ன செய்தார்? குழந்தை காப்பாற்றப்பட்டதா? இதில் உள்ள அரசியல் ஆகியவைதான் படத்தின் மீதிக்கதை. 
 
உணர்வுபூர்வமான கதைக்களத்தை அழகாய் படமாகியிருக்கிறார்   கோபி நயினார். அதனை மிக அழகாய் வெளிபடுத்தியிருக்கின்றன படத்தில் உள்ள கதாபாத்திரங்கள். 
 
ராமச்சந்திரன் துரைராஜ் இதில் முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். சுனுலக்‌ஷ்மி இயல்பான நடிப்பால் கவர்கிறார். 
 
காக்கா முட்டை ரமேஷ், விக்னேஷ், சிறுமி மகாலட்சுமி, வேல ராமமூர்த்தி, முத்துராமன், டி.சிவா, கிட்டி, வினோதினி வைத்தியநாதன் என்று அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். 
 
படத்தின் நாயகி நயன்தாரா தனது நடிப்பில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளார். நேர்மை, துணிச்சல், உண்மை என பட கதாபாத்திரத்தில் நயன்தாராவின் கம்பீரம் பளிச்சிடுகிறது. தனது ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். 
 
சமரசம் செய்து கொள்ளாத படைப்பாளியாக கோபி நயினார் நடுநிலை தவறாமல் கதையை இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷின் கேமரா பிரம்மிப்பை தருகிறது. ஜிப்ரானின் இசை படத்துக்கு மிகப் பெரிய பலம். 
 
அங்காங்கே சில தோய்வுகள் படத்தில் இருந்தாலும், அறம் சமூகத்திற்கு தேவையான படம்.