1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Bala
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (13:10 IST)

ஜித்தன் 2 விமர்சனம்

ரமேஷ் நடிப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் ஜித்தன். இந்த படத்திற்கு பின்பு ரமேஷ் ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்பட்டார். வின்செண்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ஜித்தன் 2 தற்போது வெளிவந்துள்ளது. இதனை ராகுல் இயக்கியுள்ளார்.


 

கதை:

ஜித்தன் முதல்பாகத்தில் ரமேஷ் இறந்துபோவதுபோல் முடிந்திருக்கும். ஆனால் அவர் உயிருடன் இருபது போல் ஆரம்பித்துள்ளார்கள்

சூர்யா என்ற பெயருடன் வாழ்ந்துவரும் ரமேஷ், தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும்வகையில் ஒரு அழகான வீட்டை ரூ. 50 லட்சத்திற்கு வாங்குகிறார். எட்டம் எண் உடைய அந்த வீட்டில் இருக்கும் பேய் ரமேஷையும், அவரது நண்பரையும் துரத்த நினைக்கிறது. இதனால் அவர் வீட்டை விற்க முயல்கிறார். ஆனால் வீட்டை வாங்க வருபவர்களையும் அந்த பேய் விரட்டுகிறது. பின்னர் வேறு வழியின்றி பேயுடன் பேசும் ரமேஷ் அதன் கோரிக்கையை கேட்டு நிறைவேற்ற முயல்கிறார். அந்த கோரிக்கை என்ன? கோரிக்கையை நிறைவேற்றினாரா ரமேஷ் என்பதுதான் மீதிக் கதை...


நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். பேயைக் கண்டது அவர் காட்டும் ரியாக்சன் நம்மையும் பயம் கொள்ளவைக்கிறது. நடிப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்.

பேயாக ஸ்ருஷ்டி டாங்கே. பேயாக அவரை பார்க்க ஏனோ மனது மறுக்கிறது. மற்றபடி கருணாஸ், மெகாலி,மயில்சாமி,சோனா, லொள்ளுசபா சுவாமிநாதன் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் போட்டி போட்டுகொண்டு காமெடியில் கலக்கியுள்ளனர்.

படத்தின் மிகப்பெரிய பலவீனம் படத்தொகுப்பு. பல இடங்களில் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை.  ஒளிப்பதிவுஎஸ்.கே.மிட்செல். சில இடங்களில் மிரட்டியுள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பின்னனி இசையில் பல இடங்களில் எரிச்சல்தான் வருகிறது. சின்னக்குட்டி  நாத்தனா பாடல் ஸ்ரீகாந்த் தேவாவுக்கே உண்டான ஸ்பெஷல்.  

வின்செண்ட் செல்வா திரைக்கதை, வ்சனத்தில் ராகுல் இயக்கியுள்ளார். முன்பாதியில் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் பின்பாதியில் செண்டிமெண்டால் மூழ்கடித்துள்ளார். அதுவும் ஓவர் டோஸாக மாறி ரசிகர்களை வெறுப்பேற்றுகிறது.

மொத்தத்தில் ஜித்தன் 2 ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.