புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (07:08 IST)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை மெளனிகா!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை மெளனிகா!
கடந்த 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மெளனிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
நடிகை மௌனிகா கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான ’உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் மாதவி நடித்த இந்த திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதன்பின்னர் ரெட்டை வால் குருவி, தாலாட்டு கேட்குதம்மா, வண்ண வண்ண பூக்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான மீண்டும் ஒரு மரியாதை என்ற திரைப்படத்திலும் நடித்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை மெளனிகாவுக்கு வெப்துனியா சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்