மெட்ரோ - முன்னோட்டம்
இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, சிரிஷ், சென்ட்ராயன் நடித்துள்ள மெட்ரோ திரைப்படம் நாளை வெளியாகிறது.
சென்னை தணிக்கைக்குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட மெட்ரோ திரைப்படம் மறுதணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த படம் சென்னையின் செயின் பறிப்பு குற்றத்தையும், குற்றவாளிகளையும் மையப்படுத்தியது. இந்தப் படத்துக்காக, எப்படி செயின் பறிப்பை கொள்ளையர்கள் நடத்துகிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து படத்தில் வைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன்.
ஆனால் படத்தில், செயின் பறிப்பது எப்படி என்பதை கற்றுத்தரும் விதத்தில் காட்சிகள் உள்ளன என்று தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில் படத்தை மறுதணிக்கைக்குழுவுக்கு அனுப்பி, படத்துக்கு ஏ சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.