ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (11:39 IST)

பாலாபிஷேகத்திற்கு பதில் ரத்த அபிஷேகம்.. எல்லை மீறிய ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்..!

தமிழகத்தில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது, பாலாபிஷேகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. அதேசமயம், ஆந்திராவில், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அவரது கட்டவுட்டுக்கு ரத்த அபிஷேகம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த தேவாரா திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேநிலையில், அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை பார்க்க குவிந்துள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு திரையரங்கில், திடீரென ரசிகர்கள் ஒரு கிடாய் ஆட்டை பலியாக கொடுத்து, அதிலிருந்து பாய்ந்த ரத்தத்தை எடுத்து, ஜூனியர் என்டிஆர் போஸ்டர்களில் தெளித்துள்ளனர்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மற்றும் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய நடிகர்களின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் ஆந்திராவில், ரத்த அபிஷேகம் செய்திருப்பது தற்பொழுது பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
 
 
Edited by Siva