1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:59 IST)

46 வயதில் குழந்தை பெற்ற ஊர்வசியின் மகன் இப்போ எப்படி வளர்ந்திட்டாரு!

நடிகை ஊர்வசியின் குடும்ப புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது!
 
பிறவியிலேயே நகைச்சுவை குணம் கொண்டவரான ஊர்வசி சீரியசான கதாபாத்திரங்களில் கூட நகைச்சுவையாக நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுத்தார். இவர் 80ஸ் களில் மிகச்சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார். 
இவர் நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை காதலித்து 2000ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தது பின்னர் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 
இதையடுத்து ஊர்வசி 2013ம் ஆண்டு  சென்னையை சேர்ந்த பில்டரான சிவபிரசாத் என்பவரை தனது 45 வயதில் மறுமணம் செய்துக்கொண்டார். அடுத்த ஆண்டே 46 வயதில் ஒரு ஆண் குழந்தை பெற்றார் ஊர்வசி. அவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.