திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (11:30 IST)

ஏற்கனவே சரிந்தது போதாதா? வாரத்தின் முதல் நாளில் மீண்டும் இறங்கிய பங்குச்சந்தை..!

பங்குச்சந்தை கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் சரிந்த நிலையில் இந்த வாரம் முதல் நாளே மீண்டும் சரிர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை 165 புள்ளிகள் சரிந்து 72476 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 56 புள்ளிகள் சரிந்து 21,967 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அச்சமடைந்தாலும் பங்குச்சந்தை கூடிய விரைவில் ஏறும் என்றும் குறிப்பாக தேர்தல் முடிந்ததும் உச்சத்திற்கு செல்லும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 இன்றைய பங்குச் சந்தையில் சிப்லா, கல்யாண் ஜுவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளதாகவும், ஏபிசி கேப்பிட்டல், ஐடிசி, கரூர் வைசியா வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வேலையாகியுள்ளது.
 
 
Edited by Siva