ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (11:08 IST)

ஒரு சவரன் தங்கம் ரூ.59,920.. ரூபாய் 60,000ஐ நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் 59 ஆயிரத்தை தொட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 60 ஆயிரத்தை நெருங்கிவிட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 105 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6,615 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 840 அதிகரித்து  ரூபாய் 52,920 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7085 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,680எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 87.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran