திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (10:15 IST)

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தங்கம் விலை ஒரு கிராம் நேற்று 5590.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 10 ரூபாய் குறைந்து 5580 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.44720.00 என விற்பனையான நிலையில் இன்று ரூ.80 குறைந்து ரூ.44640.00 என விற்பனையாகி வருகிறது. 
 
தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் 5500 க்கு மேல் விற்பனையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இன்று 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 6049.00 என்றும் ஒரு சவரன் 48392.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து 79.30 என்றும் ஒரு கிலோ 79300.00 என்று விற்பனையாகி வருகிறது.
 
 
 
Edited by Siva