திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (11:11 IST)

2 நாள் இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம்..இன்றைய சென்னை நிலவரம்..!

gold
தங்கம் வெள்ளி கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்றும் மீண்டும் ஒரு கிராமுக்கு இருபது ரூபாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5340.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து  ரூபாய் 42720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5702.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45616.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து  ரூபாய் 72.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Mahendran