உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய லாபத்தை பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இடையில் சில நாட்கள் லாபத்தை அதிக நபர்கள் புக் செய்ததால் பங்குச்சந்தை சரிந்தாலும் மீண்டும் பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்59 புள்ளிகள் அதிகரித்து 66 ஆயிரத்து 769 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 19804 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருவதால் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva