ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 1200 புள்ளிகள் குறைந்து அதன் பின்னர் திடீரென 843 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆகி இருப்பது முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தி வைத்துள்ளது
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 81,289.96 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது. சுமார் 10.30 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிய தொடங்கிய நிலையில், காலை 10.45 மணிக்கு சுமார் 1,200 புள்ளிகள் சரிந்தது
அதன்பின் 80,082.82 புள்ளிகள் சரிந்தபோது வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்ட வர்த்தகம், உயர்வை நோக்கி சென்ற நிலையில் கடைசியில் வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 843.6 புள்ளிகள் உயர்ந்து 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80,082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran