1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (08:42 IST)

குறையப்போகும் பெட்ரோல் & டீசல் விலை!

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு. 

 
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.  
 
இந்த நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 102.49 என்ற விலையிலும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 94.39 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்த நிலையில் பெட்ரோல் விலை ரூ.4ம்,  டீசல் விலை ரூ.5ம் குறைய வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.