1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜனவரி 2025 (10:16 IST)

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று திடீரென ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ₹360 குறைந்ததாக வெளிவந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த  டிசம்பர் 26ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ₹7,125 என்று இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ₹7260 வரை விற்பனையானது. ஆனால், இன்று திடீரென ஒரு கிராமுக்கு ₹45 உயர்ந்து 7,215 ஆக விற்பனையாகிறது.
 
அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கம் ₹58,080 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹360 குறைந்து ₹57,720 என விற்பனையாகியுள்ளது.
 
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹7871 என்றும், எட்டு கிராம் ₹62,968 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹100 என விற்பனையான நிலையில், இன்று ₹1 குறைந்து ₹99 ஆகவும், ஒரு கிலோ ₹99,000 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran