வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2014 (13:05 IST)

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் தொடர்ந்து உயர்வு

நாட்டில் பங்குச்சந்தைகளில் முதலீடு குறித்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாகவே புதிய உச்சத்தைத் தொட்ட பங்குச்சந்தை இன்றும் அதன் தாக்கத்தை எதிரொலித்தது.
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு சாதனைப் படைத்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் நிப்டி 8000 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்தது.
 
இந்நிலையில் 8 செப்டம்பர், 2014 ( இன்று ) வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து 27370 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 8145 புள்ளிகளாக உள்ளது. 
 
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 60.27 காசுகளாக உள்ளது. ஐரோப்பியாவின் யூரோ மதிப்பு ரூ.77.97 காசுகளாக உள்ளது, குறிப்பிடத்தக்கது.