வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (13:40 IST)

விலை உயரும் கார்கள்: மாருதி, டாடா அதிரடி அறிவிப்பு!!

மாருதி மற்றும் டாடா ஆகிய நிறுவனங்க அடுத்த மாதம் முதல் கார் விலைகள் உயரும் என தெரிவித்துள்ளது. 
 
கார்களை பாரத் ஸ்டேஜ் 6 க்கு தரம் உயர்த்துதல் மற்றும் கூடுதல் செலவினம் காரணமாக கார்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக மாருதி நிறுவனம் அறிவித்த நிலையில் அதனைத்தொடர்ந்து இப்போது டாடாவும் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 
 
விலை உயர்வு  சுமார் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கார்களின் ரகத்திற்கு ஏற்ப இருக்கும் என தெரிகிறது. அடுத்த மாதம் முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோன்று மஹிந்திரா, பென்ஸ் கார்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் விலை உயர்வுக்கு வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.