வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (11:33 IST)

தோல்விக்கு பின் சசிகலாவை சந்திக்கும் தினகரன்: நடக்கபோவது என்ன?

தேர்தல் தோல்வியை தொடர்ந்து டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க இருக்கிறார். 
 
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அமமுக தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், பெரிய அளவில் தோலிவியை சந்தித்தது. 
 
ஆம், பல தொகுதிகளில் அமமுக மிக மோசமாக தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்விக்கு பின்னர் சசிகலாவை வரும் 28 ஆம் தேதி தினகரன் சந்திக்க உள்ளார் என தக்வல் வெளியாகியுள்ளது. 
 
ஆர்கே நகர் வெற்றிக்கு பின் தினகரனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. தோல்விக்கு பின்னரனான இந்த சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.