வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (14:23 IST)

ராகுல் பதவி விலக வேண்டும் ? – நடிகை கஸ்தூரி ட்வீட் !

தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவாரா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்பதற்கு குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. காங்கிரஸின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரி டிவிட்டரில் ‘காங்கிரஸின் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் பதவி விலகியுள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய நேர்மை மற்றும் சுய மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி இப்போது என்ன செய்யப்போகிறார். காங்கிரஸின் இன்னும் பல மாநிலத் தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.