திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : சனி, 30 மார்ச் 2019 (12:48 IST)

’கொடநாடு கொலை’ தொடர்பான ஆதாரம் உள்ளது - ஸ்டாலின் அதிரடி

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது கொடநாடு கொலை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் கொடநாடு எஸ்டேட் அவரது ஒய்வெடுக்கும் இடமாகவும் அலுவலகாகவும் இருந்தது. ஆனால் அவர் உயிரிழந்த பின்னர் கொடநாட்டில் அடுத்தடுத்து கொலை சம்பவம் நடந்தது. அந்த பங்களாவில் இருந்த பல முக்கிய ஆவணங்கள் திருட்டுபோயின.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கொடநாடு கொலை பற்றி பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. 
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக ஸ்டாலின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்தும், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமார் ஆகிய இருவரையும் ஆதரவாக  வாக்கு சேகரித்தார்.
 
அப்போது ஸ்டாலின் கூறியதாவது:
 
கொடநாடு கொலை குறித்து மீண்டும்  பேசினார். ஏற்கனவே கோர்ட் இதுபற்றி பேசக் கூடாது என்று கூறியிர்ந்த போதிலும் அவர் பேசினார். மேலும் இந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் கொலை கொள்ளை, உள்ளிட்ட கொடூரங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
 
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றன அதெல்லாம் போலிஸாருக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.
 
கொடநாடு கொலை பற்றி பேசக்கூடாது என்று நீதிமன்றம் சொல்கிறது. ஆனால் நான் கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன். இற்காக நான் நீதிமன்றத்துக்கு செல்லவும் பயப்படமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், ஊழழ் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கொடநாடு கொலை தொடர்பாக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது என்று கூறினார்.