ராமருக்கு சீதை போல... விஜயகாந்துக்கு பிரேமலதா; பரவசத்தில் பொங்கிய அமைச்சர்!!!

rajendra balaji
Last Modified திங்கள், 25 மார்ச் 2019 (15:12 IST)
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் மாறு மாறி புகழ்ந்து கொண்டனர்.
 
நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிக தங்களின் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தேமுதிக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராமருக்கு சீதை போல... எம்.ஜி.ஆருக்கு ஜானகி போல.. விஜயகாந்துக்கு பிரேமலதா என கூறினார்.
 
இதையடுத்து பேசிய பிரேமலதா, அண்ணனின் பேச்சை கேட்டால் அனைவரும் தங்களின் கவலையை மறந்துவிடுவர் என கூறினார். இப்படி இருவரும் மாறி மாறி புகழ்ந்து கொண்டார்கள்.
 
சற்று காலம் முன்னர் வரைக்கும் இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்துவிட்டு இப்படி தேர்தலுக்காக அப்பட்டமாக நடந்து கொள்கிறார்கள் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :