வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (18:38 IST)

போதைப்பொருள் விற்பவர்களை விடமாட்டேன்... போதைப் பொருளை ஊக்குவிக்கிறது திமுக.. பிரதமர் மோடி..!!

Modi
கச்சத்தீவை திரைமறைவில் வேறு நாட்டுக்கு திமுக - காங்கிரஸ் கொடுத்ததை மறக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியில் நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், இந்த கூட்டத்தையும் உற்சாகத்தையும் பார்த்து காங்கிரஸ் கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும் என்றார்.
 
நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்றும் தெற்கிலும் புல்லட் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டிகளில் 1.20 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைப்போம் என்றும் அவர் கூறினார்.
 
தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் பெண்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
கச்சத்தீவை மற்றோரு நாட்டிற்கு தாரைவார்த்தது யார்? கச்சத்தீவை திரைமறைவில் வேறு நாட்டுக்கு திமுக - காங்கிரஸ் கொடுத்ததை மறக்க முடியாது என்று கூறிய அவர்,  கச்சத்தீவு விவகாரத்தில் ரகசிய செயல்களை பாஜகதான் வெளிக்கொண்டு வந்தது என்றும் தெரிவித்தார்.

 
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் திமுக அரசு போதைப் பொருள் ஊக்குவித்து வருகிறது என்றும் போதைப்பொருள் விற்பவர்களை நான் விடமாட்டேன் என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார்.  போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்துவேன் என்று அவர் உறுதியளித்தார்.