வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: மதுரை , திங்கள், 25 மார்ச் 2024 (15:13 IST)

அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு- திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து லைட், ரேடியோ அமைத்த திமுகவினர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று இரவு 8 மணியளவில் தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வருகை தந்துள்ளார்
 
இந்த பிரச்சாரத்திற்காக உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கொடி தோரணம் கட்டி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ள திமுகவினர்.
 
லைட் மற்றும் ரேடியோ அமைப்பதற்காக அருகே செல்லும் மின் வயர்களில் கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி பயன்படுத்தி உள்ளனர்.
 
மின் வாரிய அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெறுகிறதா? என்ற கேள்வி பொது மக்களிடயே எழுந்துள்ளது.