1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (15:30 IST)

மரியாதை தராம பேசினால்....!! ஸ்டாலினுக்கு முதல்வர் எச்சரிக்கை

வரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல்  வேட்பாளர்கள் அனைவரும் தீடீரென்று உளறுவது மக்களுக்கு வேடிக்கையாகி வருகிறது.
 
அதிமுக , திமுக இருகட்சிகளு தமிழகத்தில் எதிரும் புதிருமாக உள்ளது. இந்நிலையில் அரசியல் களத்தில்  அதுவும் தேர்தல் சமயத்தில் இவர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாடுகள் எல்லொரும் அறிவர்.சமீபத்தில் கொள்கைகளை விமர்சிப்பது விடுத்து தனி நபர்களை விமர்சித்து வருகிண்றது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
 
இந்நிலையில் திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து ஒட்டன் சத்திரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார் முதல்வர்.

அப்போது அவர் பேசியதாவது:
 
திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்படுவதாகவும் , அவர்களின் தொண்டர்களும் அவ்வாறே இருப்பதாகவும் குற்றச்சாட்டினார். 
 
தந்தையின் ஆதரவில் கொள்ளை புறம் வழியாக ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததாக கடுமையாக சிமர்சித்தார். மேலும் மரியாதை கொடுத்துப் பேசினால் மரியாதை கிடைக்கும் என்றும் தான் திருப்பி பேசினால்  ஸ்டாலினின் காது சவ்வு கிழிந்துவிடும் என்று கூறினார்.
 
இதற்கு முன்னதாக ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல விசவாயு என்று தெரிவித்து குறிப்பிடத்தக்கது.