வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By VM
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2019 (11:09 IST)

இது ஆந்திரா அக்கப்போர்! ரூ.895 கோடி சொத்து உள்ள வேட்பாளருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்..

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பணக்கார வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விக்னேஸ்வர் ஆவார். இவர் தனக்கு ரூ. 895 கோடிக்கு  சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 
தெலுங்கானா மாநிலம் செவ்வெலா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டா விக்னேஷ்வர் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு 825 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.  தனது பெயரில் 223 கோடி ரூபாய் அசையும் சொத்து கொள்ளும் தனது மனைவி சங்கீதா பெயரில் 613 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 
 
 விக்னேஷ்வர் ரெட்டியின் மனைவி சங்கீதா அப்போலோ மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆவார். தனது மகன்கள் பெயரில் 20 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.  
 
இதேபோல் விக்னேஷ்வர் ரெட்டி தனக்கு 36 கோடிக்கு அசையா சொத்துக்களும் தனது மனைவி சங்கீதா பெயரில் 1.81 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 
தனக்கோ தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமாக கார் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இல்லை என்று தனது வேட்பு மனுவில் விக்னேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.