1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (17:11 IST)

மோடி வீட்டுல கறுப்புப்பணம் இருக்குண்ணு சொன்னால் சோதனை செய்வீங்களா ? -ஸ்டாலின்

சமீபத்தில் திமுக பொருளாளர்  துரைமுருகன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மற்றும், தேர்தல் பறக்கும் படையினர் ரெய்டு நடத்தினர். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில் இது பற்றி மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். 
திமுக தலைவர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஒசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில்  திகுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளரான சத்யா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது :
 
மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என்று நான் புகார் அளித்தால் அவரது வீட்டில் சோதனை செய்வீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மோடி அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் வருமான வரி சோதனை நடக்கிறது. 
 
புகாரின் அடிப்படையில்தான் சோதனை நடப்பதாகத் தமிழக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படி என்றால் மோடியின் வீட்டில் கறுப்புப் பணம் உள்ளதாக நான் புகார் அளித்தால் சோதனை நடக்குமா என்று பேசினார்.
 
மேலும் இந்த ரெய்டுகளுக்கு திமுக பயப்படாது. வருமான வரித்துறை மற்றும் ரயில்வே போன்ற மத்திய அரசு பணியிடங்களில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.