வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (18:40 IST)

பிரபல நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பிரச்சாரமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே அறிவித்தார். ஆனால், போட்டியில்லை என்றால் என்ன பிரச்சாரம் செய்வோம் என பிரபல நடிகைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யயுள்ளதாக செய்திகள் வெளியாகின. 
 
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். 
 
ஏற்கனவே, சுமலதாவிற்கு ஆதரவாக பிரபல கன்னட நடிகர்களான கேஜிஎஃப் புகழ் யஷ் மற்றும் தர்ஷன் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்நிலையில், அம்பரீஷின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என  தகவல் வெளியானது.
இது குறித்து சுமலதா கூறியது பின்வருமாறு, எனக்காக பிரச்சாரம் செய்ய ரஜினிகாந்த் வர மாட்டார். நான் யாரையும் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை. எனக்காக ரஜினி பிரச்சாரம் செய்யப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.